close
Choose your channels

'எந்திரன்' சாதனையை முறியடிக்குமா 'பாகுபலி'

Tuesday, July 7, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் பிரமாண்ட திரைப்படமான 'பாகுபலி' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பது மிக வேகமாக புக் ஆகி வரும் ரிசர்வேஷனில் இருந்தே தெரிகிறது.

தென்னிந்திய ரசிகர்கள் மட்டுமின்றி தென்னிந்திய நட்சத்திரங்களும் இந்த படத்தின் ரிலீஸை மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது அவர்களுடைய சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துக்களில் இருந்தே தெரிகிறது.


பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமாகிய பி.சி.ஸ்ரீராம் இன்று தனது சமூக வலைத்தளத்தில் பாகுபலி' படம் குறித்து கூறியிருப்பதாவது, "பிரமாண்ட படங்களுக்கு முன்னோடியாக கண்டிப்பாக பாகுபலி' படம் அமையும். இதுபோன்ற படங்கள் எதிர்காலத்தில் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது. படத்தின் ரிலீஸ் தினத்தை மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்' என்று கூறியுள்ளார். பி.சி.ஸ்ரீராமின் இந்த கருத்துக்கு 'பாகுபலி படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுவரை தென்னிந்தியாவிலேயெ மிக அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ள ரஜினிகாந்த் - ஷங்கர் ஆகியோரின் எந்திரன் படத்தின் வசூலை, பாகுபலி' திரைப்படத்தின் வசூல் முறியடிக்கும் என விநியோகிஸ்தர்கள் தரப்பினர் எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.