close
Choose your channels

'பாகுபலி 2' படத்துக்கு ராஜமெளலியின் சம்பளம் ரூ.100 கோடியா?

Sunday, April 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனரின் பிரமாண்ட திரைப்படமான 'பாகுபலி 2' படத்தின் சுனாமி இன்னும் ஊடகங்களில் நிற்கவில்லை. சினிமாவின் மீது விருப்பமே இல்லாதவரையும் இந்த படம் பார்க்க வைத்துவிட்டது. இந்தியா முழுவதையும் பேச வைத்துவிட்ட இந்த படத்தின் உருவாக்கத்திற்கு ஒரே காரணம் இயக்குனர் ராஜமெளலியும் அவருடைய குடும்பமும்தான்.

பிரபாஸ், அனுஷ்கா இல்லாமல் கூட இந்த படத்தை உருவாக்கிவிடலாம். ஆனால் ராஜமெளலி இல்லாமல் இந்த படம், சான்ஸே இல்லை. அந்த அளவுக்கு அவருடைய ஐந்து வருட உழைப்பு இந்த படத்தில் கொட்டி கிடக்கின்றது.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் இந்த படத்திற்கான ராஜமெளலியின் சம்பளம் ரூ.100 கோடி என்ற செய்தி பரவி வருகிறது. ரூ.250 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வெகுவிரைவில் ரூ.1000 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ராஜமெளலிக்கு ரூ.100 கோடி சம்பளம் என்பது பொருந்தக்கூடிய ஒன்றுதான். இந்த செய்தி மட்டும் உண்மையாக இருந்தால் பாலிவுட்டின் 'கான்' நடிகர்களை எல்லாம் நம் தென்னிந்திய கலைஞர் தூக்கி சாப்பிட்டுவிட்டார் என்பது உண்மையாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.