close
Choose your channels

ஐபிஎல் மைதானத்தில் நடனமாடும் '2.0' நாயகி

Tuesday, April 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் நாயகியான எமிஜாக்சன் டிடிவி தினகரனின் தொப்பி சின்னத்திற்காக பிரச்சாரம் செய்வார் என்று கடந்த வாரம் ஒரு வதந்தி மிக வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்நிலையில் அவர் நாளை தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டியின் ஆரம்பவிழாவில் நடனம் ஆடுவார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
நாளை ஐதராபாத் நகரில் முதல் போட்டி தொடக்கவிழாவை அடுத்து நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
இந்நிலையில் ஐதராபாத்தில் நாளை நடைபெறவுள்ள தொடக்கவிழாவில் '2.0' நாயகி எமி ஜாக்சன் நடனமாடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவர் சில இந்திப் பாடல்களுக்கு மொத்தம் ஆறு நிமிடங்கள் நடனம் ஆடவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ஐபிஎல் இறுதிப்போட்டி தினத்திலும் எமிஜாக்சன் நடனம் ஆடுவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.