close
Choose your channels

ஷங்கரின் அடுத்த படத்தில் 3 வடிவேலு?

Wednesday, July 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது '2.0' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியில் பிசியாக உள்ளார். இந்த நிலையில் வடிவேலு நடிப்பில் சிம்புதேவன் இயக்கவுள்ள 'இம்சை அரசன் 2ஆம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் தயாரிக்கவுள்ளதாக ஷங்கர் தெரிவித்திருந்ததை பார்த்தோம்.

முதல் பாக 23ஆம் புலிகேசி படத்தில் வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்திருந்த நிலையில் இந்த இரண்டாம் பாக படத்தில் அவர் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கான பிரமாண்டமான செட் அமைக்கும் பணி பூந்தமல்லி அருகே உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்று வருவதாகவும், அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

வடிவேலுவை அடுத்து மற்ற கேரக்டர்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை இயக்குனர் சிம்புதேவன் தேர்வு செய்து வருவதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.