close
Choose your channels

சக்தி வாசுவின் '7 நாட்கள்' திரை முன்னோட்டம்

Thursday, May 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி, ராகவா லாரன்சுடன் நடித்த 'சிவலிங்கா நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்த அடுத்த படமான '7 நாட்கள்' திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படம் வரும் ஜூன் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முன்னோட்டம் குறித்து தற்போது பார்ப்போம்.

ரேஸ் த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் கதை ஏழு நாட்களில் என்ன நடக்கின்றது என்பதை குறிக்கும் வகையில் உள்ளது. சக்தியின் உறவினரும், சுந்தர் சியின் உதவி இயக்குனருமான கெளதம் இயக்கியுள்ள இந்த படத்தில் சக்தி, அங்கனாராய், நிகிஷா பட்டேல், பிரபு, கணேஷ் வெங்கட்ராமன், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவான 'புடிச்சிருக்கு பெண்ணே சொல்லிபுடு' என்ற பாடலை மதன்கார்க்கி எழுத அதை டி.ராஜேந்தர் பாடியுள்ளார். இந்த பாடல் எப்.எம் வானொலிகளில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை மில்லியன் டாலர் மூவிஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில் வெளியான 'இணையதளம்' படத்தில் நடிப்பில் கலக்கிய கணேஷ் வெங்கட்ராமன், இந்த படத்தில் வில்லனாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.