close
Choose your channels

அஜீத்துடன் 'டீலை' கேன்சல் செய்த அருண்விஜய்?

Thursday, April 16, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

என்னை அறிந்தால்' படத்தில் அஜீத்துடன் நடித்த அருண்விஜய், அந்த படத்தின் மூலம் அஜீத் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். தனது திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின்னர் நீண்ட நாட்களாக ரிலீஸாகாமல் இருந்த 'வா டீல்' படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தார்.

ஆனால் அதே தேதியில் கமல்ஹாசனின் உத்தம வில்லன், ஐஸ்வர்யா தனுஷின் 'வை ராஜா வை' மற்றும் எஸ்.பி.ஜனநாதனின் 'புறம்போக்கு என்னும் பொதுவுடமை' ஆகிய படங்கள் ரிலீஸாகவுள்ளதால் மே 1ஆம் தேதி தனது 'வா டீல்' படத்தை ரிலீஸ் செய்யப்போவதில்லை என்றும், ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அருண்விஜய் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அருண்விஜய், வம்சி கிருஷ்ணா, கார்த்திகா நாயர், சதீஷ், ஜெயப்பிரகாஷ், ரேணுகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துளார். ஃபெதர் டச் எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை சிவஞானம் என்பவர் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.