close
Choose your channels

கபாலியுடன் கனெக்சன் ஆகும் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்'

Wednesday, February 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான 'வேலைக்காரன்' பட டைட்டிலை தேர்வு செய்த சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' படக்குழு தற்போது ரஜினியின் லேட்டஸ்ட் சூப்பர் ஹிட் படமான 'கபாலி' படப்பிடிப்பு நடந்த மலேசியாவை அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கான லொகேஷனாக தேர்வு செய்துள்ளனர்.

'வேலைக்காரன்' படத்தின் முதல்கட்ட சென்னை படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் உள்பட படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கிவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் படக்குழுவினர் மலேசியா செல்லவுள்ளனர்.

மலேசியாவில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இந்த படப்பிடிப்பு பாடல்கள் மற்றும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

'கபாலி' உள்பட மலேசியாவில் படமாக்கப்பட்ட பல திரைப்படங்கள் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அந்த பட்டியலில் 'வேலைக்காரன்' படமும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.