close
Choose your channels

2வது முறையாக ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்

Monday, April 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.


இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்து வரும் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தின் டீசர் வரும் 28ஆம் தேதி மாலை 5மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டீசரை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட சம்மத்தித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிரோஷா, சரவணன், கருணாஸ் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தை 'டார்லிங்' பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையில் தயாராகி வரும் இந்த படத்தை லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.