close
Choose your channels

பிரபல நடிகரின் சாதனையை பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

Sunday, May 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடித்த 'தங்கல்' திரைப்படம் ஏற்கனவே இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் வெளியாகி ரூ.700 கோடி வசூலாகி சாதனை செய்த நிலையில் சமீபத்தில் இந்த படம் சீனாவில் வெளியானது. கடந்த சில நாட்களில் சீனாவில் மட்டுமே இந்த படம் ரூ.825 கோடி வசூலாகி 'பாகுபலி 2' படத்தின் வசூலுக்கு கடும் சவால் கொடுத்து வருகிறது. சீன வசூலையும் சேர்த்து இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.1600 கோடியை நெருங்கிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே அமீர்கானின் 'பிகே' திரைப்படமும் சீனாவில் நல்ல வசூலை குவித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சீனாவில் அமீர்கான் படம் வசூல் சாதனை செய்துள்ளது.

சீனாவில் பெற்ற இந்த அபார வசூல் காரணமாக இந்திய திரையுலகினர் அமீர்கானுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களும் தனது சமூக வலைத்தளத்தில் அமீர்கானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சீன மக்களின் இதயங்களை மீண்டும் வென்ற அமீர்கானுக்கு எனது பாராட்டுக்கள்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.