close
Choose your channels

சிவாஜி, எந்திரனுடன் கனெக்ஷன் ஆன 'கபாலி?

Monday, August 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' படத்தின் போட்டோஷூட் சமீபத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது என்பதையும், இந்த படத்தில் ரஜினி, 'சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் தோன்றவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். போட்டோஷூட் தினத்தின்போது ரஜினிக்கு மேக்கப் போடுவதற்காக பாலிவுட் மேக்கப் கலைஞர் ஒருவர் வருகை தந்திருந்ததாகவும், கொரியாவில் இருந்து போட்டோகிராபர் வருகை தந்திருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

.சென்னையை சேர்ந்த பானு பாஷ்யம் என்ற பெண் மேக்கப் கலைஞர் பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு மேக்கப் கலைஞராக பணிபுரிந்து வருகிறார். நம்மூர் ஜோதிகா, த்ரிஷா, நயன்தாரா, விக்ரம், சூர்யா ஆகியோர்களுக்கும் இவர் பல படங்களுக்கு மேக்கப் கலைஞராக பணிபுரிந்துள்ளார். ஏன் ரஜினி நடித்த சிவாஜி, எந்திரன் ஆகிய படங்களுக்கும் இவர்தான் மேக்கப் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி படத்தில் இவர் மேக்கப் செய்த மொட்ட பாஸ் கேரக்டர் உலகெங்கும் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1991ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த 'தர்மதுரை' படத்தின் கெட்டப்பை ஒற்றி 'கபாலி' படத்தின் கெட்டப் ரஜினிக்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தோற்றம் ரஜினி ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் மேக்கப் கலைஞர் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. அப்போது பானு பாஷ்யம் அவர்களின் மேக்கப் திறமை வெளியே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.