close
Choose your channels

அல்லு அர்ஜூன் அடுத்த படத்தில் ஆக்சன் கிங்

Wednesday, March 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் அனைவரின் விருப்பமான நடிகர்களில் ஒருவராக ஆக்சன் கிங் அர்ஜூன் திகழ்ந்து வருகிறார். மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்திற்கு பின்னர் ஒருசில படங்களில் வில்லனாகவும் நடித்து வரும் அர்ஜூன் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தை வம்சி இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து இயக்குனரிடம் கேட்டவுடன் உடனே நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், வரும் ஜூன் முதல் அர்ஜூன் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணணந்து கொள்ளவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

அல்லு அர்ஜூன் ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு 'ருத்ரம்மாதேவி' படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். மேலும் அவர் விரைவில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.