close
Choose your channels

ஆக்சன் கிங் அர்ஜூனின் 'நிபுணன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Tuesday, May 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆக்சன் கிங் அர்ஜூன் நடித்த 150வது திரைப்படமான 'நிபுணன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வரும் ஜூலை 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதே தேதியில் 'மரகத நாணயம்' மற்றும் 'பண்டிகை' ஆகிய படங்களும் ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

'அச்சமுண்டு அச்சமுண்டு' பட இயக்குனர் அருண்வைத்தியநாதன் இயக்கியுள்ள இந்த படத்தில் அர்ஜூன், பிரசன்னா, வைபவ், வரலட்சுமி, சுஹாசினி, சுமன், உமா ரியாஸ்கான் உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.நவீன் இசையமைத்துள்ள இந்த படத்தை ஃபேஷன் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது.

தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் அர்ஜூனின் ஆக்சன் பிரியர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.