close
Choose your channels

விஜய் வழியை பின்பற்றும் கார்த்தி?

Wednesday, July 8, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மெட்ராஸ், கொம்பன் ஆகிய இரு தொடர் வெற்றி படங்களை கொடுத்த கார்த்தி, தற்போது நாகார்ஜுனனுடன் இணைந்து ஒரு படத்திலும், நயன்தாராவுடன் இணைந்து ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஒரு சிறிய விடுமுறை கார்த்திக்கு கிடைத்துள்ளது.

இந்த விடுமுறையை தனது குடும்பத்தினர்களுடன் கழிக்க முடிவு செய்த கார்த்தி, மனைவி மற்றும் குழந்தையுடன் லண்டன் சுற்றுப்பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கும் நிலையில் லண்டன் சீதோஷ்ண நிலை மிகவும் ரம்மியமாக இருப்பதாகவும், குடும்பத்துடன் லண்டனில் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் கார்த்தி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.


மேலும் இந்த விடுமுறைக்கு பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் நாகார்ஜுனனுடன் நடிக்கும் படத்திற்காக கார்த்தி பாரிஸ் செல்லவுள்ளார். பாரீஸில் நடைபெறும் படப்பிடிப்பில் நாகார்ஜுனன், கார்த்தி, தமன்னா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இளையதளபதி விஜய்யும், புலி படத்தின் பணிகளை முடித்த பின்னர் லண்டனுக்கு குடும்பத்துடன் ஓய்வு எடுக்க கடந்த மாதம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.