close
Choose your channels

பேயாக நடிக்கும் பேயை ஓட்டிய நடிகர்

Sunday, July 12, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'டார்லிங்' படத்தில் பேய் ஓட்டுபவராக கலக்கலான நடிப்பை கொடுத்து பெரும் பாராட்டுக்களை பெற்ற 'நான் கடவுள்' ராஜேந்திரன், தற்போது இன்னொரு படத்தில் பேயாகவே நடிக்கின்றார்.

'நாய்கள் ஜாக்கிரதை' படத்தின் மூலம் வெற்றிகரமாக ரீ எண்ட்ரி ஆன சிபிராஜ், அடுத்து நடிக்கவிருக்கும் திரைப்படம் 'ஜாக்சன் துரை' இந்த படத்தில் சிபிராஜ் பேய்களை அடக்குபவராக நடித்துள்ளார்.

ஒரு கிராமத்தில் அட்டகாசம் செய்யும் இரண்டு பேய்களை எப்படி சிபிராஜ் அடக்குகிறார் என்பதுதான் கதை. சத்யராஜ் மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் ஆகிய இரண்டு பேர்களும் பேய்களாக நடித்துள்ளனர். இந்த படத்தில் ராஜேந்திரன் தனக்கு இணையாக நடித்திருப்பதாகவும், அவருடைய நடிப்பை சத்யராஜே வியந்து பாராட்டியதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் ரிலீஸானது. சத்யராஜ், ராஜேந்திரன் ஆகிய இருவரும் மிரட்டும்படியாக அந்த பர்ஸ்ட் லுக்கில் தோற்றமளிக்கின்றனர்.

இந்த படத்தை ஸ்ரீக்ரீன் புரடொக்ஷன் நிறுவனம் தயாரிக்க தரணிதரன் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே 'பர்மா' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.