close
Choose your channels

முக்குலத்தோர் புலிப்படையில் இருந்து கருணாஸ் திடீர் நீக்கம்.

Tuesday, March 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் திருவாடனை தொகுதியின் எம்.எல்.வுமான கருணாஸ் சமீபத்தில் தனது 'முக்குலத்தோர் புலிப்படை' கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் கூண்டோடு நீக்கி அதிரடி உத்தரவிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். நீக்கப்பட்ட நிர்வாகிகள் கருணாஸ் தலைமையை விரும்பவில்லை என்றும், அதன் காரணமாகவே இந்த அதிரடி நடவடிக்கையை கருணாஸ் எடுத்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சற்று முன்னர் திடீரென 'முக்குலத்தோர் புலிப்படை அமைப்பில் இருந்தே கருணாஸ் நீக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை குறித்து இந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பாண்டித்துரை மற்றும் துணைத்தலைவர் சந்தனகுமார் கூட்டாக மதுரையில் அறிவித்துள்ளனர்.
மேலும் முக்குலத்தோர் புலிப்படையின் புதிய தலைவராக சந்தனகுமார் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக செயற்குழு தீர்மானம் கூறுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.