close
Choose your channels

விஷாலிடம் விஷம் இருப்பது உண்மைதான். மிஷ்கின் அதிரடி பேச்சு

Thursday, March 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் ஐந்து அணியினர்களும் தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் விஷாலின் உடம்பு முழுவதும் விஷம் இருப்பதாக கலைப்புலி எஸ்.தாணு கூறிய கருத்துக்கு சினிமா விழா ஒன்றில் இயக்குனர் மிஷ்கின் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது;
விஷாலுக்கு உடம்பு முழுவதும் விஷம் இருப்பதாக கூறுகின்றார்கள். ஆம், சிவபெருமானுக்கு தொண்டையில் விஷம் இருந்தது போல விஷாலுக்கும் கொஞ்சம் இருக்கலாம். ஆனால் அவர் நல்லது மட்டுமே செய்யும் நபர். நடிகர் சங்க தேர்தலின்போது கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளனர்.
நானும் ஒரு பத்து படங்கள் வரை இயக்கியுள்ளேன். அதில் எனக்கு பிடித்த இரண்டு படங்கள் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' மற்றும் 'நந்தலாலா' ஆகிய படங்கள். ஆனால் இந்த இரண்டு படங்களையும் வெளியிட நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல. தயாரிப்பாளர் சங்கம் எனக்கு கொஞ்சம் கூட உதவி செய்யவில்லை. நான் பட்ட கஷ்டம் இனிமேல் எந்த தயாரிப்பாளருக்கும் ஏற்பட கூடாது என்பதற்காகவே விஷால் அணியில் நான் இருக்கின்றேன்
தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் கண்டிப்பாக ஒரு வருடத்திற்குள் தீர்த்து வைப்போம். அவ்வாறு செய்யவில்லை என்றால் எங்களை கழுத்தை பிடித்து நீங்கள் தாராளமாக வெளியே தள்ளலாம்.
தமிழ் சினிமாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் வேள்வியில் இறங்கியுள்ளோம். இந்த வேள்வியில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்
இவ்வாறு இயக்குனர் மிஷ்கின் பேசினார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.