close
Choose your channels

பிரபல தொழிலதிபரை திருமணம் செய்கிறார் நடிகை அசின்

Monday, August 10, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எம்.குமரன் s/o மகாலட்சுமி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அசின் அதன் பின்னர் விஜய்யுடன் சிவகாசி, போக்கிரி, காவலன், அஜீத்துடன் வரலாறு, ஆழ்வார், சூர்யாவுடன் கஜினி, வேல், கமல்ஹாசனுடன் தசவாதாரம் போன்ற பல படங்களில் நடித்தார். அதன்பின்னர் பாலிவுட் சென்று அங்கும் பிரபல இந்தி நடிகர்களுடன் இணைந்து நடித்த அசின் தற்போது பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மொபைல் போன் உற்பத்தியில் முன்னணி இடத்தில் இருக்கும் 'மைக்ரோமேக்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 'கஜினி' படத்தில் அசின் தொழிலதிபர் சஞ்சய் ராமசாமியை காதலிப்பது போன்ற காட்சிகள் வரும். ஆனால் தற்போது அவருடைய நிஜ வாழ்க்கையிலேயே ஒரு தொழிபதிபர் விரைவில் கணவராக வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

36 வயதான ராகுல் ஷர்மா, இந்தியாவின் முன்னணி மொபைல் போன்கள் உற்பத்தி நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தை தோற்றுவித்தவர். அதுமட்டுமின்றி உலகின் மிக இளவயது தொழிலதிபர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அசின் தற்போது 'ஆல் இஸ் வெல்" என்ற படத்தில் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தை தவிர அவர் வேறு எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அசின் விஜய்யுடன் 'காவலன்' படத்தில் நடித்த பின்னர் வேறு தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.