close
Choose your channels

ஓபிஎஸ் வீட்டிற்கு சென்று ஆதரவு கொடுத்த பிரபல நடிகை

Wednesday, February 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு தேடி வந்து கொண்டிருக்கிறது. இதுவரை அவருக்கு 10 எம்.எல்.ஏக்களும் 12 எம்பிக்களும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இன்னும் பலர் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஓபிஎஸ் அவர்களுக்கு திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை கவுதமி இன்று முதல்வர் ஓபிஎஸ் இல்லம் சென்று தனது ஆதரவை வழங்கினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகங்களுடன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்திய கவுதமி, தற்போது ஓபிஎஸ் ஆதரவு அவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளார். ஓபிஎஸ் மீண்டும் பதவிக்கு வந்தால் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் விலகும் என்பதால் அவர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.