close
Choose your channels

லட்சுமி மிட்டல், டி.ஆர்.பாலுவுடன் எனக்கு தொடர்பு உண்டு. கஸ்தூரி

Thursday, June 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் சாலைமறியல் போராட்டத்தை நடிகை கஸ்தூரி கலாய்த்த விவகாரம் சூடு பிடித்து அவரை சமூகவலைத்தள பயனாளிகள் மிக மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதில் அச்சில் ஏற்ற முடியாத சில மோசமான கருத்துக்களும் அடங்கும்.
இந்த நிலையில் கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் மேலும் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். அதில் பிரபல தொழிலதிபர் லட்சுமி மிட்டலுக்கும், பிரபல அரசியல்வாதி டி.ஆர்.பாலுவுக்கும் எனக்கு தொடர்பு உண்டு. அது என்ன தொடர்பு என்று கண்டுபிடியுங்கள் என்று பதிவு செய்திருந்தார்.
இந்த பதிவால் அதிர்ச்சி அடைந்த சமூகவலைத்தள பயனாளிகள் ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தை கூறி வரும் நிலையில் கஸ்தூரியே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டி.ஆர். பாலு அவர்களுக்கும், லட்சுமி மிட்டலுக்கும், எனக்கும் இன்று பிறந்தநாள். அவ்வளவுதான்' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் கூகுள் மற்றும் விக்கிபீடியாவில் கஸ்தூரியின் பிறந்த நாள் மே 1ஆம் தேதி என்று குறிப்பிட்டுள்ளதாக கஸ்தூரியில் சமூகவலைத்தள பக்கத்தில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.