close
Choose your channels

நயன்தாராவின் 'மாயா' ரிலீஸ் தேதி?

Tuesday, July 7, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்பிற்கு உரிய திரைப்படமான 'மாயா' வரும் 24ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


முதன்முதலாக நயன்தாரா அம்மா வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் திகில் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த திரைக்கதை அம்சங்களை கொண்டது. தற்போதைய கோலிவுட் பேய் சீசனில் இருந்து முற்றிலும் இந்த படம் மாறுபட்டு இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாராவுடன் நெடுஞ்சாலை ஹீரோ ஆரி, ரோபோ சங்கர், அம்ஜத்கான், லக்ஷ்மி ப்ரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். ரோன் எதன் யோஹான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவும், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.