close
Choose your channels

ஓபிஎஸ் உடம்பில் கை இருக்காது. மிரட்டும் அதிமுக நிர்வாகி

Friday, February 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தின் ஆட்சியை பிடிக்க போவது யார் என்று நடந்து கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு அரசியலில் வெற்றி பெறுவது முதல்வர் ஓபிஎஸ் அவர்களா? அல்லது சசிகலாவா? என்பது வெகுவிரைவில் தெரிந்துவிடும். இந்நிலையில் இருவருமே ஆட்சியில் அமர, அதிமுகவை கைப்பற்றும் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஓபிஎஸ் அவர்கள் அதிமுகவை கைப்பற்ற நினைத்தால் அவர் உடம்பில் கை இருக்காது என்று தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கலைராஜன் செய்தியாளர்கள் முன்னிலையில் மிரட்டல் விடுத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காபந்து முதல்வராக இருந்தாலும் இன்றுவரை ஓபிஎஸ் அவர்கள்தான் தமிழக முதல்வர். ஒரு முதல்வரையே 'கை இருக்காது' என்று வெளிப்படையாக மிரட்டுபவர்கள் நாளை ஆட்சிக்கு வந்தால் என்ன அராஜகம் நடக்கும் என்று சமூக வலைத்தளங்களில் பலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.