close
Choose your channels

டெல்லியில் மோடி-தம்பிதுரை சந்திப்பு. என்ன பேசினார்கள்?

Thursday, February 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக கவர்னரை இன்று இரவு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ள நிலையில் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பியும், துணை சபாநாயகருமான தம்பிதுரை பிரதமர் மோடி அவர்களை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு பாராளுமன்ற கூட்டத்தொடர் முதல்பகுதி நிறைவு காரணமாக சந்திக்கப்பட்ட மரியாதை நிமித்தமாக சந்திப்பு என்றும் தமிழக அரசியல் சூழல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தம்பிதுரை கூறியுள்ளார்.

முன்னதாக அதிமுக எம்பிக்கள் குடியரசு தலைவரை இன்று சந்திக்க நேரம் கேட்டிருந்ததாகவும், ஆனால் அவர் அதிமுக எம்பிக்களை சந்திக்க நேரம் கொடுக்கவில்லை என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.