close
Choose your channels

தனுஷை அடுத்து விஜய்க்கும் அப்பாவாக நடிக்கிறாரா எஸ்.ஏ.சி?

Sunday, November 1, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் 'சமீபத்தில் டூரிங் டாக்கீஸ்' என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்நிலையில் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் அவருக்கு தந்தையாக எஸ்.ஏ.சி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் தனுஷை அடுத்து விஜய்க்கும் தந்தையாக ஒரு படத்தில் எஸ்.ஏ.சி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விஜய், இளையதளபதி விஜய் அல்ல, பாடலாசிரியரும் நடிகருமான பா.விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

70 வயதான ஒரு முதியவரின் கோபத்தைப் பற்றிய கதையாக உருவாக இருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்ரம் விஜய் இயக்கவுள்ளார். இதில் பா.விஜய், சாந்தினி உள்பட பலர் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்கு நையப்புடை` என தலைப்பு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.