close
Choose your channels

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மிண்டும் வருமான வரித்துறையினர் ரெய்டு

Wednesday, May 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று காலை முதல் பிரபல எண்ணெய் மற்றும் குளிர்பான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வரும் நிலையில் தற்போது சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் இரண்டாவது முறையாக சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அமைச்சர் வீட்டில் நடந்த சோதனையை அடுத்து விஜயபாஸ்கரும் அவருடைய மனைவி ரம்யாவும் வருமான வரித்துறை அலுவலகத்தில் தனித்தனியாக நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில் அன்றைய சோதனையின்போது ஒரு அறையை பூட்டி சீல் வைத்ததாகவும், இன்று அந்த அறையில் சோதனை செய்வதோடு, ஏற்கனவே கிடைத்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.