close
Choose your channels

வெளிநாட்டு பத்திரிகையின் அட்டைப்படத்தில் ''வேதாளம்'' செய்தி

Friday, October 2, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் நிலையில், இந்த படம் தமிழக ஊடகங்களை மட்டுமின்றி வெளிநாட்டு ஊடகங்களிலும் அட்டைப்படத்தில் இடம்பெறும் அளவுக்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இலங்கையில் இருந்து வெளியாகும் முன்னணி பத்திரிகையின் அட்டைப்படத்தில் அஜீத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், அஜீத் படம் குறித்த கட்டுரையும் அந்த இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வாரத்திற்குள் முடிந்துவிடும் என்றும், அடுத்த வாரம் முதல் முழு வேகத்தில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், ராகுல்தேவ், தம்பிராமையா, சூரி உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தை மிகுந்த பொருட்செலவில் ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.