close
Choose your channels

அஜித்தும் கவுண்டமணியும் ஒரே ரகம் : சந்தானம்

Wednesday, April 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவுண்டமணி ஹீரோவாக நடித்துள்ள 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. சுசீந்திரன் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் நாயகியாக ரித்விகா நடித்துள்ளார்.

இந்த விழாவில் காமெடி நடிகர் சந்தானம் உள்பட பலர் கலந்து கொண்டனர். சந்தானம் இந்த விழாவில் பேசியபோது, 'அப்போதைய அஜித்குமார்தான் கவுண்டமணி சார். சினிமா நிகழ்வுகள் உள்ளிட்ட எந்த பொது நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ள மாட்டார். அவரை பார்க்க வேண்டும் என்றால் திரையில் மட்டும்தான் அவரது நடிப்பை பார்த்து மகிழ்ச்சியடைய முடியும்.

மேலும் கவுண்டமணிக்கு இணை யாருமே கிடையாது. நான் உள்பட பல காமெடி நடிகர்கள் அவருடைய பாணியைத்தான் பின்பற்றுகிறோம். இந்த படத்தின் டிரைலர் நன்றாக உள்ளது. படமும் நல்ல வெற்றியை பெறும்' என்றும் சந்தானம் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.