close
Choose your channels

உதயநிதி படத்தில் இணையும் அஜீத் பட நடிகை

Thursday, August 20, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நாயகனாக அறிமுகமாகி அதன் பின்னர் இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா ஆகிய படங்களில் நடித்த உதயநிதி தற்போது 'கெத்து' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் உதயநிதி தன்னுடைய அடுத்த படமான 'ஜாலி எல்.எல்.பி படத்தின் தமிழ் ரீமேக் படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளார்.


இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக இரண்டாம் முறையாக ஹன்சிகா நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை அக்ஷரா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே அஜீத், ஆர்யா, நயன்தாரா நடித்த 'ஆரம்பம்' படத்தில் தீக்ஷா ரானே என்ற கேரக்டரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த படத்தில் வழக்கறிஞராக நடிக்கவுள்ளாராம்.

'என்றென்றும் புன்னகை' பட இயக்குனர் அஹ்மத் இயக்கவுள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. ஜாலி எல்.எல்.பி பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆகியபோதிலும், தமிழுக்கு தகுந்தவாறு பல காட்சிகள் மற்றும் சம்பவங்களை இயக்குனர் மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் சென்னையில் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.