close
Choose your channels

அஜித் No . 1, விஜய்க்கு டாப் 10-இல் இடமில்லை

Thursday, August 20, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நமது அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் கூகுளில் கடந்த ஆறு மாதங்களில் அதிகம் தேடப்பட்ட திரை நட்சத்திரங்கள் குறித்த தகவலை கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடங்களில் கர்நாடகத்தை சேர்ந்த சுதீப் ஒருவர் மட்டுமே உள்ளார். மற்ற ஒன்பது இடங்களிலும் தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் ஆக்கிரமித்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த பட்டியலில் நடிகர்களில் முதல் இடத்தில் 'தல அஜீத்' உள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. என்னை அறிந்தால்' படத்தின் ஸ்டைல் லுக், டீஸர், டிரெய்லர் ஆகியவை அஜித் கர்நாடக மக்களை கொஞ்சம் அதிகமாகவே ஈர்த்துள்ளதாகவும் அதன் காரணமாக அவர் முதலிடத்தை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜீத்தை அடுத்து பிரபாஸ், அல்லு அர்ஜூன், ரஜினிகாந்த், தனுஷ், மகேஷ்பாபு, விக்ரம், சுதீப், பவன்கல்யாண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் உள்ளனர். இந்த பட்டியலில் விஜய் பெயர் இல்லாதது அனைவரையும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் நடிகைகளின் பட்டியலில் முதல் இடத்தில் காஜல் அகர்வால் உள்ளார். இவரை அடுத்து அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, சமந்தா, நயன்தாரா, த்ரிஷா, ரம்யா, ப்ரியாமணி, சினேகா மற்றும் பாவனா மேனன் ஆகியோர் உள்ளனர்.

கூகுள் நிறுவனம் எந்த அடிப்படையில் இந்த பட்டியலை தயார் செய்தது என்பது குறித்த தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.