close
Choose your channels

அஜீத்தின் 'வேதாளம்' தீபாவளிக்கு வருவது சாத்தியமா?

Monday, October 5, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக்கில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தீபாவளிக்கு வெளிவரும் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியாமல் எப்படி தீபாவளிக்கு வெளிவரும் என செய்திகள் வெளிவந்துள்ளன.

தீபாவளிக்கு இன்னும் கிட்டத்தட்ட ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் 'வேதாளம்' தீபாவளிக்கு வெளிவருவது சாத்தியமா? என ஒருசிலர் சந்தேகங்களை கிளப்பியுள்ளனர். இந்நிலையில் 'இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருவதாகவும், ஸ்ருதிஹாசன் உள்பட முக்கிய நடிகர், நடிகைகளின் டப்பிங் பணிகள் முடிந்துவிட்டதாகவும், இப்படம் தீபாவளிக்கு திட்டமிட்டபடி வெளிவரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் அஜீத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்படும் என கூறப்படுகிறது.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், சூரி, தம்பிராமையா, ராகுல்தேவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அனிருத்தின் இசையமைப்பில் ஏ.எம்.ரத்னம் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.