close
Choose your channels

ரூ.10 கோடியை நெருங்கிவிட்ட தல அஜித்தின் 'விவேகம்'

Monday, September 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகி எதிர்மறை விமர்சனங்களையும் கடந்து சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் நல்ல வசூலை பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் 'விவேகம்' படத்திற்கு பின்னர் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆனபோதிலும் சென்னையில் இந்த படத்திற்கு இன்னும் சராசரி வசூல் கிடைத்து வருகிறது.

இந்த படம் 25வது நாளை கடந்த நிலையில் கடந்த வார இறுதியில் சென்னையில் இந்த படம் 7 திரையரங்குகளில் 24 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.4,03,611 வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படத்தின் மொத்த சென்னை வசூல் ரூ.9,92,55,665 என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ரூ.8 லட்சம் வசூல் செய்தால் இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.10 கோடி வசூல் சாதனையை தொட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.