close
Choose your channels

ஸ்பாட் எடிட்டிங் செய்ய பெல்கிரெட் செல்கிறார் 'விவேகம்' எடிட்டர். மே 1-ல் டீசர் உறுதி

Tuesday, April 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்து வருகிறது. தற்போது பெல்ஜியம் நாட்டில் படப்பிடிப்பை முடித்துவிட்ட 'விவேகம்' குழுவினர் தற்போது செர்பியா நாட்டின் தலைநகரான பெல்கிரேட் சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் 'விவேகம்' படத்தின் எடிட்டர் அந்தோணி ரூபன், சென்னையில் இருந்து பெல்கிரேடுக்கு தற்போது பயணம் செய்து கொண்டிருப்பதாகவும், அவர் விரைவில் பெல்கிரேடில் உள்ள படக்குழுவினர்களுடன் இணணந்து ஸ்பாட் எடிட்டிங் செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அஜித்தின் பிறந்த நாள் நெருங்கி வரும் நிலையில் இப்படத்தின் டீசரை அவருடைய பிறந்த நாளில் வெளியிடும் நோக்கத்தில்தான் ஸ்பாட் எடிட்டிங் செய்ய அந்தோணி வரவழைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே மே 1ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு எந்த நேரமும் வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.