close
Choose your channels

அஜித்திடம் சிறுத்தை சிவா விடுத்த வேண்டுகோள்

Saturday, April 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிக்கவுள்ள 'அஜித் 57' படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு வரும் மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் இயக்குனர் சிறுத்தை சிவா பிசியாக உள்ளார்.


சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான பகுதிகள் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கடந்த சில மாதங்களாக முழு ஓய்வில் இருந்த அஜீத்தின் எடை அதிகரித்திருப்பதாகவும், இந்த படத்தின் கேரக்டருக்காக அவரை எடையை குறைக்கும்படி சிறுத்தை சிவா கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே விரைவில் அஜித் ஜிம்முக்கு சென்று எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார்.

'அஜித் 57' படத்தில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஸ்லிம் அஜித்தை பார்க்கலாம் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.