close
Choose your channels

திறமையின் ஒட்டுமொத்த உருவம் தான் அஜித். காஜல் அகர்வால்

Tuesday, March 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் இருபெரும் நட்சத்திரங்களான அஜித், விஜய் ஆகியோர்களின் படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பை பெற்றவர் நடிகை காஜல் அகர்வால்.

அஜித்துடன் 'விவேகம்' படத்திலும், விஜய்யுடன் 'தளபதி 61' படத்திலும் நடித்து வரும் காஜல், அவ்வப்போது இருவருடனும் நடிக்கும் அனுபவம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் 'விவேகம்' படத்தில் காஜல் அகர்வால் கெட்டப்புடன் கூடிய ஸ்டில் ஒன்று சற்றுமுன்னர் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. வழக்கம்போல் இதுவும் அஜித் ரசிகர்களால் டிரெண்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த புகைப்படத்துடன் காஜல் அகர்வால் அஜித் குறித்து கூறிய ஒரு வரியும் இணைந்து டிரெண்ட் ஆகியுள்ளது. 'திறமையின் ஒட்டுமொத்த உருவம்தான் அஜித்' என்று காஜல் அகர்வால் அஜித் குறித்து பெருமையுடன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.