close
Choose your channels

'சபாஷ் நாயுடு' படத்தில் கமலின் இன்னொரு குடும்ப உறுப்பினர்

Friday, April 29, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' படத்தின் தொடக்கவிழா இன்று காலை நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் சிறப்பாக நடைபெற்றது என்பதை பார்த்தோம். இந்த படத்தில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள நிலையில் கமலின் இளைய மகள் அக்ஷராஹாசனும் பணிபுரியவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கவுள்ள நிலையில் அவருடைய உதவியாளராக அக்ஷராஹாசன் பணிபுரியவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அவருடைய தாயார் சரிகா நடித்துள்ள 'சொசைட்டி' உள்பட ஒருசில படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், ரம்யாகிருஷ்ணன், பிரம்மானந்தம், சித்திக் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.