close
Choose your channels

'தல' பிறந்த நாளில் ரிலீஸ் ஆகும் அஜித்-ஷாலினி படம்

Friday, April 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் பிறந்த நாள் வரும் மே 1ஆம் தேதி வரவுள்ள நிலையில் இந்த ஆண்டு அவருடைய பிறந்த நாளை மிகச்சிறப்பாக கொண்டாட ரசிகர்கள் முன்னேற்பாடு செய்து வருகின்றனர். இப்பொழுது முதலே கவுண்ட்-டவுனை ஆரம்பித்துவிட்ட ரசிகர்கள் பல சமூக சேவைகள் மூலம் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித் பிறந்த நாள் அன்று அவர் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் ஒன்று தமிழகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் மே 1ஆம் தேதி அஜித், ஷாலினி நடித்த 'அமர்க்களம்' திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அஜித், ஷாலினி வாழ்க்கையில் இணைய காரணமான இந்த படத்தை சரண் இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்தில் ரகுவரன், ராதிகா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பரத்வாஜ் இசையில் உருவாகியிருந்த இந்த படம் அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.