close
Choose your channels

விக்ரம் அம்மாவாக கமல்-ரஜினி நாயகி?

Friday, March 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் நடிப்பில் 'வாலு' இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. விக்ரம், ஜோடியாக முதன்முதலாக இந்த படத்தில் தமன்னா இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் விக்ரம் அம்மாவாக நடிக்க கடந்த 90களில் கமல், ரஜினி ஆகியோர்களின் அதிர்ஷ்ட நாயகியாக இருந்த அம்பிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர் இந்த படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அம்பிகா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் விஜய் இயக்கிய 'இது என்ன மாயம்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் கதை வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன்' படத்தின் கதையை ஒட்டி இருப்பதாக வதந்திகள் பரவி வருகிறது. பொல்லாதவன் படத்தில் தொலைந்த பைக்கை தனுஷ் தேடி அலைவதை போல இந்த படத்தில் விக்ரம் கடத்தப்பட்ட காரை தேடுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.