close
Choose your channels

இன்று முதல் விஜய்யுடன் இணையும் ரஜினி நாயகி

Monday, November 2, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டு ஹீரோயின்களில் ஒருவரான சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்ததாக அவரே தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கூறினார்.

இந்நிலையில் இந்த படத்தின் இன்னொரு ஹீரோயின் எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாகவும், இதற்காக நேற்றே எமிஜாக்சன் சென்னை வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய்-எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட பாடல் மற்றும் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு இன்று முதல் படமாக்கப்படும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வந்துள்ளது. மேலும் 'எந்திரன் 2' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இந்த படம் இவருக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக விஜய் சமீபத்தில் 'செல்லாக்குட்டி' என்று தொடங்கும் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது தெரிந்ததே. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தை 'ராஜா ராணி' இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.