close
Choose your channels

'தரமணி' படத்தின் தரமான வசூல் நிலவரம்

Monday, August 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தரமான, வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழக ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருவார்கள் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த வெள்ளியன்று வெளியான மற்றொரு தரமான திரைப்படமான ராம் அவர்களின் 'தரமணி' படத்திற்கும் எதிர்பார்த்ததைவிட நல்ல வசூல் கிடைத்துள்ளது.

நீண்ட தாமதத்திற்கு பின்னர் வெளிவந்தாலும் சமூக வலைத்தளம் என்ற மிகபெரிய மீடியாவின் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக சென்னையில் இந்த படத்தின் வசூல் ஆச்சரியம் தரும் வகையில் இருந்துள்ளது. கடந்த வார இறுதி நாட்களில் 12 திரையரங்குகளில் வெளியாகி 142 காட்சிகள் திரையிடப்பட்ட இந்த படம் ரூ.38,25,718 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் கதைக்காகவே வெற்றி பெறும் திரைப்படங்களில் பட்டியலில் இணைந்துள்ள இந்த படம் நல்ல வசூலை பெறுவதன் மூலம் கோலிவுட்டில் இன்னும் அதிகளவில் தரமான, வித்தியாசமான படங்களை எதிர்பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.