close
Choose your channels

இந்த வருடம் நான்கு இசை விருந்துகள்: அனிருத்

Monday, May 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2011ஆம் ஆண்டு தனுஷின் '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், இந்த 6 வருடங்களில் மொத்தம் 14 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு மட்டுமே அவர் இசையமைத்த நான்கு படங்கள் வெளியாகவுள்ளதாக தெரிகிறது.

தற்போது அனிருத், அஜித்தின் 'விவேகம்', 'சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்', சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன் மற்றும் தெலுங்கில் பவன்கல்யாண் நடிக்கும் படம் என மொத்தம் நான்கு திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த படங்களின் பாடல்கள் இந்த ஆண்டே ரசிகர்களுக்கு காத்திருப்பதாகவும், இந்த நான்கு படங்களின் இசை விருந்துகளும் ரசிகர்களுக்கு வெவ்வேறு இசை அனுபவத்தை கொடுக்கும் என்றும் அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட நான்கு படங்களுமே பெரிய நடிகர்களின் படங்கள் என்பதால் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆக வாய்ப்பு இருப்பதாகவும், இந்த வருடம் அனிருத்துக்கு மறக்க முடியாத வருடமாக இருக்கும் என்றும் கோலிவுட்டில் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.