close
Choose your channels

34 வருடங்களுக்கு பின் ரீமேக் ஆகும் படத்தில் அனிருத்

Thursday, April 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 1982ஆம் ஆண்டு நாரதமுனியாக விசு நடித்து இயக்கிய திரைப்படம் 'மணல் கயிறு'. எஸ்.வி.சேகர், மனோரமா, கிஷ்மு உள்பட பலர் நடித்த இந்த வெற்றிப்படம் 34 வருடங்களுக்கு பின்னர் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

எஸ்.வி.சேகர் மகன் அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் விசு, எஸ்.வி.சேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தரண் இசையமைக்கும் இந்த படத்தை மதன்குமார் என்பவர் இயக்குகிறார்.


இந்நிலையில் இந்த படத்திற்காக தரண் கம்போஸ் செய்த ஒரு பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இந்த பாடல் மிகவும் நன்றாக வந்திருப்பதாகவும், இந்த பாடல் தற்கால இளைஞர்களை பெரிதும் கவரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.