close
Choose your channels

சூர்யா-ஹரியின் 'சிங்கம் 3' இசையமைப்பாளர்

Monday, November 2, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, அறிமுகமான முதல் படத்தில் இடம்பெற்ற 'கொலைவெறி' பாடலால் உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் அனிருத், அதன் பின்னர் கோலிவுட்டில் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். பின்னர் விஜய், அஜீத் ஆகியோர்களின் படங்களுக்கு இசையமைத்த அனிருத், தற்போது சூர்யா படம் ஒன்றில் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா, நடித்த 'பசங்க 2' படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் நடைபெற்று வருகிறது. அவர் நடித்து வரும் இன்னொரு படமான '24' படத்தின் படப்பிடிப்பு இவ்வாரத்திற்குள் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பு தீபாவளிக்கு பின்னர் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார்.

அதுமட்டுமின்றி அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அனிருத் இசையமைத்த 'வேதாளம்' தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.