close
Choose your channels

அனுஷ்காவின் 'ருத்ரம்மாதேவி' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Friday, July 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடித்த சரித்திர கதையம்சம் கொண்ட 'பாகுபலி' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் ரிலீஸ் ஆகி மாபெரும் வசூல் சாதனை செய்துள்ள நிலையில் அனுஷ்கா நடித்த மற்றொரு சரித்திர திரைப்படமான 'ருத்ரம்மாதேவி' வரும் செப்டம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அனுஷ்கா, ராணா, அல்லு அர்ஜூன், நித்யா மேனன், கேத்ரின் தெரசா, பிரகாஷ்ராஜ் ஆகியோர்கள் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை குணசேகர் பிரமாண்டமாக தயாரித்து இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளது இன்னும் ஒரு சிறப்பு அம்சம் ஆகும்.

பாகுபலி' படத்திற்கு சமமாக இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜா சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவைப் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்த படத்தின் இயக்குனர் குணசேகர் இந்த படத்தின் வெளியீட்டு தேதி செப்டம்பர் 4 என்பதை உறுதி செய்தார். மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாகுபலி' படத்தையும் இதே நிறுவனம்தான் தமிழகத்தில் ரிலீஸ் செய்தது என்பது அனைவரும் தெரிந்ததே.

பாகுபலி படத்தின் பிரமாண்ட காட்சிகளே இன்னும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத நிலையில் இன்னுமொரு பிரமாண்ட விருந்து செப்டம்பர் 4ல் ரசிகர்களுக்கு காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.