close
Choose your channels

10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணையும் அபூர்வ சகோதரர்கள்

Tuesday, July 7, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் படங்களை இயக்கிய மூத்த இயக்குனர். இவர் தமிழில் கமல்ஹாசனை வைத்து மட்டும் ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன், மகளிர் மட்டும், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து படங்களை இயக்கி வெற்றி பெறும் வித்தையை அறிந்த சிங்கீதம் சீனிவாசராவ், தற்போது இரண்டு தெலுங்கு படங்களை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் உலக நாயகனுடன் இணைந்து ஒரு படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த மும்பை எக்ஸ்பிரஸ் படமே கமல் அவரது இயக்கத்தில் நடித்த கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தற்போது கமல் நடித்து வரும் 'தூங்காவனம்' படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்த படம் தொடங்கப்படும் என்றும் இதுவொரு குறுகிய கால சின்ன பட்ஜெட் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மொத்தமே ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இந்த படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கமல்ஹாசன் நடித்த 'உத்தம வில்லன்' படம் எதிர்பார்த்த வசூலை கொடுக்காததால், லிங்குசாமிக்கு உதவி செய்யும் நோக்கத்தில் கமல், இந்த படத்தில் நடித்து கொடுப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.