close
Choose your channels

'வேலைக்காரன்' படத்தை முந்தியது மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்'

Tuesday, July 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பிரின்ஸ் மகேஷ்பாபு நடித்து வரும் 'ஸ்பைடர்' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே மீதமுள்ளது. இந்த பாடலின் படப்பிடிப்பும் வரும் 5ஆம் தேதி முதல் படமாக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் 'ஸ்பைடர்' படத்தை செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' படம் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பே 'ஸ்பைடர்' ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மகேஷ்பாபு, ராகுல் ப்ரீத்திசிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி உள்பட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வரும் படத்தை என்.வி.பிரசாத் மற்றும் தாகூர் மது தயாரித்து வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.