close
Choose your channels

மகேஷ்பாபு-ஏ.ஆர்.முருகதாஸ் 'ஸ்பைடர்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Monday, May 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்துள்ள 'ஸ்பைடர்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மற்றும் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த படத்தின் டீசர் வரும் 31ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த படம் தசரா திருநாளில் வெளியாகவுள்ளது என்ற தகவலை மகேஷ்பாபு தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

மகேஷ்பாபு நடிக்கும் முதல் நேரடி தமிழ்ப்படமான இந்த படத்தில் ராகுல் ப்ரித்திசிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.