close
Choose your channels

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த பட ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

Wednesday, April 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்து வரும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து வரும் 'ரங்கூன்' என்ற படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் ஜூன் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் சற்று முன்னர் வெளியிட்ட புதிய போஸ்டர் ஒன்றில் இருந்து உறுதி செய்துள்ளனர். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
கௌதம் கார்த்திக், சனா மக்புல், பிரசாந்த் நாயர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பாடல்களுக்கு விக்ரம் என்பவர் இசையமைத்துள்ளார். மேலும், பின்னணி இசையை அஸ்வின் ரெஞ்சு என்பவர் அமைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.