close
Choose your channels

ரஜினியின் '2.0' முழு படத்தை பார்த்த முதல் இரண்டு விஐபிக்கள்!

Wednesday, June 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கரின் பிரமாண்டமான இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் '2.0'. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்காக ரஜினிகாந்த் உள்பட அனைவரும் டப்பிங் செய்து முடித்துவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் எடிட்டிங் பணிகளையும் படத்தொகுப்பாளர் அந்தோணி முடித்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் 3D டெக்னாலஜி படம் என்பதால் 3D கண்ணாடி அணிந்தே இந்த படத்தை அந்தோணி எடிட்டிங் செய்துள்ளார்.

இந்த நிலையில் எடிட்டிங் செய்து முடிக்கப்பட்ட இந்த படத்தை முதன்முதலாக இயக்குனர் ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் சமீபத்தில் பார்த்தனர். இன்னும் ஒருசில நாட்களில் ரஹ்மான் இந்த படத்தின் பின்னணி இசையை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி வெளிவரவுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன், அதில் ஹூசைன், சுதான்ஷூ பாண்டே உள்பட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.