close
Choose your channels

விஜய்யின் 'தெறி'யை பின்பற்றிய சூர்யாவின் '24'

Saturday, April 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா மூன்று வேடங்களில் நடித்துள்ள '24' திரைப்படம் வரும் மே 6-ல் பிரமாண்டமாக உலகம் முழுவதும் 2000க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகின்றது. இந்த படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகி அனைத்து எப்.எம்களிலும் அடிக்கடி ஒலித்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்திற்காக இன்னொரு புதிய பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்துள்ளதாகவும், இந்த பாடல் ஆல்பத்தில் இடம்பெறவில்லை என்றும் பாடலாசிரியர் மதன்கார்க்கி கூறியுள்ளார்.
வயதான தோற்றத்தில் நடித்துள்ள சூர்யாவுக்காக 'காலம் என் காதல்' என்ற பாடல் இடம் பெற்றுள்ளதை அடுத்து இளமை சூர்யாவுக்காக ஒரு பாடலை ரஹ்மான் கம்போஸ் செய்துள்ளதாகவும், அந்த பாடலை தான் எழுதியுள்ளதாகவும் மதன்கார்க்கி தெரிவித்துள்ளார். இந்த பாடல் Dangerக்கு hi5 போடு, Daredevilக்கு வானம் ரோடு! என்ற வரிகளுடன் ஆரம்பிக்கின்றது.
சமீபத்தில் வெளிவந்த 'தெறி' படத்திலும் இதே போன்று ஆல்பத்தில் இல்லாத ஒரு பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கடைசி நேரத்தில் கம்போஸ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.