close
Choose your channels

விஜய்க்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த ஸ்பெஷல் டிரீட்

Tuesday, April 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் உள்ள பழமையான அரண்மனை உள்பட முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதற்கான லொகேஷன் பார்க்கும் பணிகள் முடிவடைந்து விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் ஒரு பாடல், ஒரு சண்டைக்காட்சி மற்றும் சில வசன காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக விஜய்க்காகவே ஸ்பெஷலாக ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் ஒன்றை கம்போஸ் செய்துள்ளதாகவும், இந்த பாடலின் டியூனை கேட்ட படக்குழுவினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த பாடல் விஜய்க்காக ரஹ்மான் கொடுத்த ஸ்பெஷன் ட்ரீட் ஆகவே கருதப்படுகிறது.

விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துவருகிறது. அட்லி இந்த படத்தை இயக்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.