close
Choose your channels

அமலாபால் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்?

Tuesday, July 21, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'தலைவா' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை அமலாபால், அந்த படத்திற்கு பின்னர் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்டு நடிப்பதை குறைத்து கொண்டார். சமீபத்தில் தயாரிப்பாளராக மாறிய அமலாபால், பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கும் படத்தை தயாரிக்கவுள்ளதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் இதுகுறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படம் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த திரைப்படம் என்பதால், ஒரு சமூக அக்கறையோடு இந்த படத்திற்கு ரஹ்மான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, நாசர்,அசோக் செல்வன் மற்றும் பலர் நடிக்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் தொடங்கும் என கூறப்படுகிறது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்த படத்திற்கு சாபுசிரில் கலை இயக்குனராக பணிபுரியவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.